பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகரின் கருத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் பற்றி தரக்குறைவான கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல பத்திரிகையாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின் அவரது வீட்டையும் முற்றுகையிட்டனர். இவரது கருத்திற்கு எதிராக கனிமொழி உட்பட பலர் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகரின் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர் “இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.