சினிமா

'வேலையில்லா பட்டதாரி 2' படப்பிடிப்பு துவங்கியது

webteam

‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘விஐபி-2’ படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக இருப்பதாக செய்திகள்
வெளிவந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
முன்னதாக டிசம்பர் மாதம் விஐபி-2 படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படப்பிடிப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப்போர்டு அடித்து துவங்கி
வைத்தார். இந்நிலையில் விஐபி- படப்பிடிப்பு தொடங்கியதை அறிவிக்கும் வகையில் ‘விஐபி-2’ படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மோஷன் போஸ்டரில் ‘விஐபி-2’ படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ் மற்றும் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை கஜோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த
பெரும்பாலான நட்சத்திரங்களே அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.