சினிமா

’சூர்யா 40’ படத்தில் வில்லனாக வினய்?

sharpana

பாண்டிராஜ் இயக்கவிருக்கும் ‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

இந்நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் அறிமுகமானார் வினய். தொடர்ந்து ஹீரோவாக நடிக்கத்துவங்கியவர், மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் விஷாலுக்கு வில்லானாக நடித்து மிரட்டினார். இந்நிலையில், 'சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.