சினிமா

விஜய் சேதுபதி கதை,திரைக்கதை,வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’!

விஜய் சேதுபதி கதை,திரைக்கதை,வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’!

sharpana

விஜய் சேதுபதி கதை,திரைக்கதை,வசனத்தில் விமல் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்தமாதம் 16 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில்தான் விஜய் சேதுபதி நடிகராக அறிமுகமானார். சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என தனது வித்தியாச ரசிக்க வைக்கும் நடிப்பால் தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்து உச்சத்தில் இருக்கிறார்.

முன்னணி நடிகர்களில் தனுஷ், சிம்புதான் கதை, வசனம் எழுதி இயக்கியும் வந்தனர். இவர்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் கடந்த 2015 ஆம் ஆண்டு, பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ’ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்காக வசனம் எழுதினார். அதற்கடுத்ததாக, அதே இயக்குநரின் ’சென்னை பழனி மார்ஸ்’ படத்திற்கும் எழுதியிருக்கிறார்.

இயக்குநர் சரவண சக்தி

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் தற்போது சென்னையில் ’லாபம்‘ படத்தில் நடித்துக் கொண்ருந்தவர், இயக்குநர் சரவண சக்தி இயக்கும் குலசாமி படத்திற்காக கதை,திரைக்கதை,வசனத்தையும் எழுதி முடித்துள்ளார். இப்படத்தில், விமல் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சரவண சக்தி விஜய் சேதுபதியின் மாமனிதன்,தர்மதுரை,க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.