சினிமா

வில்லன் ரிலீஸ் தேதி மாற்றம்

வில்லன் ரிலீஸ் தேதி மாற்றம்

webteam

தீபாவளி விருந்தாக ‘மெர்சல்’ திரைப்படத்துடன் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த வில்லன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

மலையாள இயக்குனர்  உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் - மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள ‘வில்லன்’ திரைப்படம் வரும் 19ம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில்  வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 27 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் விஷால் மற்றும் ஹன்சிகா மோத்வானி முதன்முறையாக மலையாள திரையுலகில் கால்பதிக்கின்றனர். த்ரில்லர் மூவியான இதில் மோகன்லால் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளர். மேலும் இத்திரைப்படம் நடிகர் விஜய் நடித்துள்ள ’மெர்சல்’ திரைப்படத்துடன் களத்தில் மோதும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது.  சமீபத்தில் தான் வில்லன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.