முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ’கொடிவீரன்’. மகிமா ஹீரோயினாக நடிக்கிறார். சசிகுமாரின் தங்கையான சனுஷா நடிக்கிறார். பூர்ணா, விதார்த் உட்பட பலர் நடிக்கின்றனர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமாரே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் சுற்றுப் பகுதியில் நடந்து வருகிறது.
இதில் வில்லனாக நடிக்க முதலில் நடிகர் அர்ஜூனிடம் பேசினர். அவர் மறுத்ததால், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளர் இந்தர்குமார் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது இயக்குனர் விக்ரம் சுகுமார் வில்லனாக நடிக்கிறார். இத்தகவலை சசிகுமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விக்ரம் சுகுமார், கதிர், ஓவியா நடித்த ’மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கியவர்.