சினிமா

விக்ரமின் ஸ்கெட்ச் டீசர் 5 மில்லியன் வியூஸ்

webteam

ஸ்கெட்ச் படத்தின் டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். 

விக்ரமின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ஸ்கெட்ச். இதன் டீசர் கடந்த 17ம் தேதி வெளியானது.

 விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ராதாரவி, வேலராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். இதில் விக்ரம் முரட்டுத்தனமான கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள ஸ்கெட்ச் பஞ்ச் வசனம் பரவலாக பேசப்பட்டது. டீசர் வெளியான சில மணி நேரங்களில் ட்விட்டர் ட்ரெண்ட்டிலும் இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் 
இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கெட்ச் டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை தொட்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.