சினிமா

விக்ரமின் ‘கோப்ரா’வை தீபாவளிக்குள் முடிக்க திட்டமிடும் படக்குழு?

விக்ரமின் ‘கோப்ரா’வை தீபாவளிக்குள் முடிக்க திட்டமிடும் படக்குழு?

sharpana

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை தீபாவளிக்கு முன்னரே முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

 இயக்குநர் அஜய் ஞானமுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கியிருந்தார். அதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தார்.

இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தப் படங்கள். இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றிபெற விக்ரமுடன் மூன்றாவது படமாக ‘கோப்ரா’வில் இணைந்தார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் படப்புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டு இருந்தது.

(ஸ்ரீநிதி ஷெட்டி)

சமீபத்தில் சினிமா ஷூட்டிங் தடைகளை அரசு நீக்கியிருப்பதால் மீண்டும் படப்பிடிப்புகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் கோப்ரா படத்தின் ஷூட்டிங்கை அக்டோபரில் மீண்டும் துவக்கி தீபாவளிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது