சினிமா

இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டிய விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டிய விக்ரம்!

sharpana

'கர்ணன்' திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நடிகர் விக்ரம் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்'திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே இருவேறு விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த நிலையில் கர்ணன் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டியுள்ளார்.

கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கர்ணன் திரைப்படத்தை பார்த்த விக்ரம் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.