விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் “துருவநட்சத்திரம்”. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் செம லுக்காக விக்ரம் இருக்கிறார். இப்படத்தின் முக்கால்வாசி பாகத்தில் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கிலும், பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படம் வரும் ஆகஸ்டில் ரிலீஸாகும் என தெரிகிறது. ஜான் என்ற பெயரில் விக்ரம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. கவுதம் மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அச்சம் என்பது மடமையடா வெற்றிக்குப் பின்னர் துருவ நட்சத்திரத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கவுதம் மீண்டும் கைகோர்ப்பார் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.