சினிமா

அஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்!

அஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம்!

webteam

அஜய் ஞானமுத்து இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

அருள்நிதி நடித்த ’’டிமான்டி காலனி’’, நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த, ’’இமைக்கா நொடிகள்’’ படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்துவருகிறது. டெக்னீஷியன்களும் முடிவு செய்யப்படவில்லை. ஹீரோயினாக நடிக்க, முன்னணி நடிகை ஒருவரிடம் பேசி வருகின்றனர். இதுபற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இது விக்ரமுக்கு 58 வது படம்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின், முன் தயாரிப்பு வேலைகள் இப்போது தொடங்கியுள்ளன. ‘’வழக்க மான ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இது இருக்காது. அஜய் இயக்கிய முந்தைய படங்களை விட, இது வேறு மாதிரி இருக்கும். ஆக்‌ஷன் காட்சி கள் மிரட்டலாக இருக்கும்’’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.