சினிமா

100 வயது முதியவராக நடிக்கும் விஜய்சேதுபதி

100 வயது முதியவராக நடிக்கும் விஜய்சேதுபதி

webteam

த்ரிஷாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி 96 வயது முதியவராக நடித்துவருகிறார்.

‘96’ படத்தின் ஃப்ர்ஸ்லுக் போஸ்டர் இன்று வெளியானது. சி.பிரேம்குமார் இயக்கும் இந்தப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மூன்று காலகட்டங்களில் வரும் பாத்திரங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அதன்படி 16 வயது இளைஞராகவும், 36 வயது தோற்றத்திலும் 96 வயது முதியவர் என வித்தியாசமான மூன்று தோற்றங்களில் அவர்
நடித்துவருகிறார். போட்டோகிராபராக வரும் அவரது காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் அவர் ‘96’ வயது முதியவராக நடித்து வருகிறார். த்ரிஷாவுடன் ஆடுகளம் முருகேசன், காளி வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர்.