சினிமா

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்சேதுபதியின் கெட்அப்புகள்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விஜய்சேதுபதியின் கெட்அப்புகள்

webteam

விஜய்சேதுபதியின் பல்வேறு கெட்அப் புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் பல்வேறு கெட்அப் போட்டு நடிக்கிறார் விஜய் சேதுபதி. அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த வித்தியாசமான டைட்டில் பெரிய அளவில் வரவேற்பை அடைந்தது. "காமெடி கலந்த வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் இது என்பதால் இப்படி வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறேன்’ என்று கூறிருந்தார் படத்தின் இயக்குனர். இதில் நாயகியாக நிகரிகா என்ற ஆந்திரா அழகி நடிக்கிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று விஜய்சேதுபதி இந்தப் படத்திற்காக போட்டிருக்கும் விதவிதமான கெட் அப்புகள் வெளியாகியுள்ளன. எமதர்மராஜா, பஞ்சுத்தலை சாமியார், தாதா என்று பல ரூபம் ஏற்றிருக்கிறார் சேது. இந்தப் புகைப்படங்கள் இன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.