நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர் என்று இயக்குநர் பாரதிராஜா ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “வணக்கம் நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர்.அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தேமுதிக கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.