சினிமா

‘2020 கோடை கொண்டாட்டம்’ - வெளியானது ‘தளபதி64’ அறிவிப்பு

Rasus

விஜய் நடிக்கும் 64-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜயின் 63-வது படம் ‘பிகில்’. அட்லி இப்படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இதனிடையே விஜயின் அடுத்தப்படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில் விஜயின் 64 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது.

படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாவும், இப்படம் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் எனவும் படக்குழு உறுதி அளித்துள்ளது.