சினிமா

பாஜகவில் சேருவது என்ற கேள்விக்கே இடமில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

பாஜகவில் சேருவது என்ற கேள்விக்கே இடமில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

Veeramani

தான் பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை, எனக்கென்று தனியாக அமைப்பு உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும், மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார். நாங்களாக வருவதைவிட மக்கள் அழைக்கும்போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும். விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தற்போது முழுகவனம் செலுத்துகிறேன். பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

https://youtu.be/Or1v1GopACo

அத்துடன் விஜய்சேதுபதி விவகாரத்தில், நடிகர்களின் சுதந்திரத்தை தடுக்கக்கூடாது, தடுத்தால் அது தடுப்பவர்களின் தவறு. நடிகர்கள் தாங்கள் விரும்பும் கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்