சினிமா

வைரலாக மாறிய சர்கார் விஜய்யின் புகைப்படம்..!

Rasus

சர்கார் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து புகைப்பிடித்தபடி உள்ள விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி விஜய் புகைப்பிடிப்பது போல் வெளியிடப்பட்ட ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் நீக்கப்பட்டது.

சர்கார் சர்ச்சை தொடர்ச்சியாக நீண்ட நிலையில் இன்று ஓரளவிற்கு ஓய்ந்து விஜய் ரசிர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சர்சார் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ரசிர்கள் பலரும் அதனை தங்களது டிபி-யாக மாற்றி வருகின்றனர். சர்காரில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஈவிபி பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அங்கு விஜய் இருக்கும் புகைப்படத்தை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,“ இறுதியாக விஜய்யை வெளிக்காட்ட அனுமதி தந்த இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். அதில் விஜய் ‘சர்கார்’ குடைபிடித்தப்படி உள்ளார். இதனை ரசிர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.