சினிமா

கலாய்க்கிறீங்களா..?மிரட்டிய விஜய்.. மெர்சலான யு-டியூப் விஜே!

கலாய்க்கிறீங்களா..?மிரட்டிய விஜய்.. மெர்சலான யு-டியூப் விஜே!

webteam

யு-டியூப் தளத்தில் கலக்கி வரும் அப்துல், மெர்சல் படத்தில் விஜயுடன் நடித்து வருகிறார். அவரது டப்பிங் பணி தற்போது முடிந்துவிட்டது. 

யு-டியூபில் வெப் சீரியஸ் பார்ப்பவர்கள் அப்துலை அறியாமல் இருக்க மாட்டர்கள். யூடியூப்பில் கலக்கிக் கொண்டிருந்த  அப்துல் ’அதே கண்கள்’ படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து இரண்டாவதாக மெர்சலில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட்டார். யு-டியூப்பில் அப்துலை வைத்து ஒளிப்பதிவு செய்த விஷ்ணுதான் மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட.  

மெர்சல் படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்ட அப்துல் இப்படத்தில் தனது ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ’படப்பிடிப்பின் போது என்னிடம் வந்து நான் செய்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என விஜய் கேட்டார். அப்போது தயக்கமாக இருந்தது. பின்னர் அதை அவர் மறந்து விட்டார். மறு நாள் நானே அவரிடம் சென்று அவர் சம்பந்தப்பட்ட வீடியோவைக் காட்டினேன்.  அதை பார்த்த விஜய் ’ என்னை இப்படிலாம் வைத்து வீடியோ பண்ணிருக்கீங்களா? எனக் கேட்டார். ஐயோ அப்படி எல்லாம் இன்னும் இல்லைங்க அண்ணா என கூறினேன். அப்போ அப்படி ஒரு ஐடியாலாம் இருக்கா என குறும்பாக மிரட்டினார்’ என்கிறார் அப்துல்.