சினிமா

சென்னையில் ‘தளபதி62’முப்பது நாள் ஷூட்டிங்

சென்னையில் ‘தளபதி62’முப்பது நாள் ஷூட்டிங்

webteam

சென்னையில் ‘தளபதி62’ ஷூட்டிங் மொத்தம் 30 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய திரைப்படம் ‘தளபதி62’. இதற்கு இன்னும் முறையாக தலைப்பு வைக்கவில்லை. பொதுவாக ஒருபடத்தின் பூஜை தொடங்கும் போது படத்தின் டைட்டிலை வைத்தே தொடங்குவார்கள். அந்தப் பாரம்பர்யம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகாமல் மிக ரசிகயமாக காப்பாற்றப்படுவதைபோல் படத்தின் தலைப்பையும் இறுதி நேரம் வரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அதற்கும் காரணம் உள்ளது. தலைப்பு முன்பே வெளியானால் அதற்கு உரிமை கொண்டாடுவதற்கென்றே ஒரு கூட்டம் நீதிமன்றம் சென்றுவிடுகிறது. அதேபோல படத்தலைப்பை காரணம் காட்டி அரசியல் கட்சிகளும் சர்ச்சையை கிளப்ப தொடங்கிவிடுகின்றன. ஆகவே விஜய் போல பெரிய நடிகர்களின் படத்தலைப்புகள் ரசிகயமாக பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இன்று தொடங்கிய ‘தளபதி62’ பூஜைக்குப் பின் முறையாக க்ளாப் அடித்து நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். இந்தப் படப்பிடிப்பு மொத்தம் 30 நாள்கள் சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதற்காக முயற்சிகளை படக்குழு இப்போது முடக்கி விட்டுள்ளதாக தெரிய வருகிறது.