நாளை ‘வெல்வெட் நகரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட உள்ளார்.
நடிகை வரலக்ஷ்மியை பாஜகவை சேர்ந்த முரளிதர ராவ் சந்தித்த பிறகு, அவரை சுற்றி அரசியல் புயல் மையம் கொள்ள தொடங்கியது. ஆனால் அவர் நான் பாஜகவில் இணையவில்லை என விளக்கம் தந்த பிறகு லேசாக அந்த அரசியல் புயல் அமைதியாகியுள்ளது. வரலட்சுமி, பத்திரிகையாளர் வேடத்தில் முதன்முறையாக நடிக்கும் திரைப் படம் ‘வெல்வெட் நகரம்’. இதனை மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரிக்கிறார். படத்திற்கு பகத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கோலி சோடா 2' இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார். அதனை அதிகாரப்பூர்வமாக நடிகை வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், “மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். மிக்க நன்றி. எனது ‘வெல்வெட் நகரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி நாளை வெளியிட சம்மதித்ததற்கு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘நீங்கள் அதைக் காண காத்திருக்க முடியாதா?’ என கூறியுள்ளார்.