விஷ்ணு விஷால்- கேத்ரின் தெரசா நடித்துள்ள கதாநாயகன் ஆடியோ மற்றும் டிரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளது டிரெய்லர் வெளியான பின் தெரிய வந்துள்ளது. அத்துடன் இசையமைப்பாளர் அனிருத், சிம்பு ஆகியோரும் விஷ்ணு விஷாலுக்கு இந்த படத்தில் உதவி உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்பு குரல் கொடுத்துள்ளார். அனிருத் ஒரு படலை பாடியுள்ளார். தனது கதாநாயகன் படத்தில் உதவியதற்காக இந்த மூவருக்கும் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ள இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு இசையமைப்பாளரின் இசையமைப்பில் மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவதும், ஒரு கதாநாயகன் மற்றொரு ஹீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதும் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.