சினிமா

விஜய் சேதுபதியின் '96' ! காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் !

விஜய் சேதுபதியின் '96' ! காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் !


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் "96" திரைப்படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’. இந்த திரைப்படத்தை "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக கூறி வந்த நிலையில், படத்தின் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் காலையிலேயே வெளியிட்டது.

மேலும் படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள த்ரிஷா "படத்தின் டீசரை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், என்னால் காத்திருக்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.