விஜய்சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தின் ஷூட்டிங் பாரிஸில் நடைபெற்று வருகின்ற வேளையில் அப்படத்தின் புதிய புகைப்படங்கள் ட்விட்டரில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் விஜய்சேதுபதி புதிய மீசை, தாடி கெட் அப்பில் தோன்றும் படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தினை கோகுல் இயக்குகிறார். சாய்ஷா சாய்கல் பட நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் வனமகன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். ஆகவே தனக்கு வரும் கதைகளை வனமகன் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் முதலில் தெரிவிக்கும் படி கூறி வருகிறார். இயக்குநர் கோகுல் முதலில் விஜய்யிடம்தான் கதையை கூறினார். அவர் சம்மதம் சொன்ன பின்பே சாய்ஷா இந்தப் பட வாய்ப்பை ஏற்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக நாயகிக்கு 50 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்பதால் பட்ஜெட்டுக்கு பஞ்சமில்லை.
இந்நிலையில் பாரிஸ் சென்றிருக்கும் சாய்ஷா தனது பாரிஸ் அனுபவத்தை பற்றிய சிறு வீடியோ பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். நதிக்கரையோரம் அவர் பாரிஸ் அழகை வியக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இவர் ஒரு பக்கம் படம் பற்றிய விளம்பரத்தை வெளியிட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் படக்குழு விஜய்சேதிபதியின் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதி இதுவரை பார்க்காத தோற்றத்தில் தென்படுகிறார். கோட், ஷூட் என்று புதிய தோற்றத்துடன் புதிய மீசை, தாடியையும் அவர் வைத்துள்ளார்.