Vijay Sethupathi Slum Dog
சினிமா

அப்போ வில்லன், இப்போ ஹீரோ... விஜய் சேதுபதியின் `Slum Dog' | Vijay Sethupathi | Puri Jagannadh

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

Johnson

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத். தமிழில் ஹிட்டான `எம் குமரன் சன் ஆஃப்  மஹாலக்ஷ்மி', `போக்கிரி', `அயோக்யா' எல்லாம் இவர் தெலுங்கில் இயக்கிய படங்களின் ரீமேக் தான். பல முன்னணி நடிகர்களுடன் ஹிட் கொடுத்தவர் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்திற்கு `ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களிலும் பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், அழுக்கான உடை, நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். இப்படம் ஒரு ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதற்கு முன் `உப்பெனா' என்ற தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இம்முறை ஹீரோவாக தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். `அர்ஜுன் ரெட்டி', `அனிமல்' போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.