சினிமா

ரஜினிக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

ரஜினிக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

webteam

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’காலா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இதில் ஹூமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வரும் 1-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது.

இந்தப் படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் வெளியாகிறது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தீவிரவாக நடந்துவருகின்றன. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அழுத்தமான வில்லன் வேடம் என்பதால் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதாகவும் இதற்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறுகிறது கோடம்பாக்கம். ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.