விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு விஜய் சேதுபதி தான் திரைக்கதை எழுதிகிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாதத்திற்கு இரண்டு படங்களை சர்வ சாதாரணமாய் செயல்படுத்தி வரும் விஜய்சேதுபதி, முதன் முறையாக ‘கதை நாயகனாக’ அறிமுகம் ஆன படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை இவரே தயாரித்து, நடித்தும் இருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படம், தமிழ் சினிமாவின் யதார்த்தத்தை விட்டு வெகுதூரம் சென்று, தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை பற்றி பேசும் வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் விக்ராந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு விஜய்சேதுபதி தான் கதை நாயகன். ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக கதை எழுதுகிறார் விஜய் சேதுபதி. விக்ரந்தின் சகோதரர் சஞ்சீவ் இயக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்திற்கான திரைக்கதையும் வசனத்தையும் எழுதிவருகிறார்.
இதைத்தொடர்ந்து ‘சேதுபதி’ படத்தை இயக்கிய அருண்குமாரின் அடுத்தப் படத்தில் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிக்காக விஜய்சேதுபதி தாய்லாந்து சென்றுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் இசையில் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிக்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. டிசம்பரில் அதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது.