சினிமா

இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய் சேதுபதி: திருமுருகன் காந்தி பாராட்டு!

இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு விஜய் சேதுபதி: திருமுருகன் காந்தி பாராட்டு!

webteam

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ். நந்த கோபால் தயாரித்திருந்த இந்தப் படத்தை சி.பிரேம்குமார் இயக்கியிருந்தார். இதன் நூறாவது நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது.

 விஜய் சேதுபதி, த்ரிஷா, இயக்குநர் சி பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி.எஸ். மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட னர்.

விழாவில், திருமுருகன் காந்தி பேசும்போது, “ என் தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்ததும் நான் பார்த்த திரைப்படம் ’96’. காதல் என்பது அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படு கிறோம், பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள்.

ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி, அவ்வாறு செய்ய முடியும்? எங்கே கோளாறு இருக்கிறது என்பது  கவனிக்க வேண்டிய விசயம். இதுபோன்ற நேரத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது என்பதை பேசுகிற படமாக, 96 வெளியாகியிருக்கிறது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கி றார்.

அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்களோ, எதை விரும்புகிறார் களோ அதை திரையில் பிரதிபலிப்பவராக இருக்கிறார்’’ என்றார். 

நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும் திரிஷாவும் மேடையேறி ஒருவரை யொருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்.