சினிமா

முரட்டு மீசையில் விஜய்சேதுபதி... மிரட்டும் கருப்பன் ட்ரெய்லர்!

முரட்டு மீசையில் விஜய்சேதுபதி... மிரட்டும் கருப்பன் ட்ரெய்லர்!

webteam

விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

கிராமத்து பின்னணியில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் கருப்பன். ஸ்ரீசாய்ராம் கிரியேசன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் இம்மாதம் 1ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று கருப்பன் படத்தின் ட்ரெய்லர் யு-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 1.43 நிமிடங்கள் கொண்ட இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 29-ல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, சீதக்காதி, அநீதிக்கதைகள், சூப்பர் டீலக்ஸ், ஒருநாள் பார்த்து சொல்றேன். த்ரிஷாவுடன் 96, மணிரத்னம் இயக்க உள்ள படம், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒருபடம் என பலபடங்களில் நடித்து வருகிறார்.