சினிமா

விஜய்சேதுபதி புதிய கெட் அப் கசிந்தது

விஜய்சேதுபதி புதிய கெட் அப் கசிந்தது

webteam

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் விஜய்சேதுபதியின் புதிய கெட் அப் வலைதளத்தில் கசிந்தது.

விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.  இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு எட்டு கெட் அப் என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவர் மோடி மஸ்தான் போல வேடமிட்டிருக்கும் புதிய தோற்றம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. படப் பிடிப்பில் சக நடிகர்கள் உடன் யதார்த்தமாக எடுக்கப்பட்ட இப்படம் அவரது ஒரு கெட் அப் ரசியத்தை மட்டும் கசிய விட்டிருக்கிறது. இதில் இவருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார். இதை அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கிறார்.

காமெடி கலந்த வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் இது என்பதால் இப்படி வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனர். இப்படத்தின் நாயகி நிகரிகா. இவர் ஒரு ஆந்திரா அழகி. இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.