சினிமா

மறுபடியும் இயக்குநர் ஜனநாதனுடன் இணையும் விஜய்சேதுபதி

மறுபடியும் இயக்குநர் ஜனநாதனுடன் இணையும் விஜய்சேதுபதி

webteam

நடிகர் விஜய்சேதுபதி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாதாக தெரிய வந்துள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் 2015 ஆண்டு வெளியான திரைப்படம்  ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இதனை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருந்தார். இதற்கு பிறகு அவர் வேறு படங்கள் எதிலும் கமீட் ஆகாமல் இருந்து வந்தார். ஆனால் அவருக்கும் விஜய்சேதுபதிக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஜனநாதன் முயற்சியில் மூத்தக் கலைஞர்களை கெளரவிக்கும் விதத்தில் சில பொருள் உதவிகளை செய்தார் சேதுபதி. இந்நிலையில் மீண்டும் ஜனநாதன் இயக்கும் நான்காவது படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. விஜய்சேதுதியின் கால்ஷீட் புத்தகம் ஏற்கெனவே நிரம்பி வழிகிறது. அவர் அடுத்த அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பெரும் புதிராக உள்ளது. இருந்தாலும் தனது பிசியான நடிப்புக்கு மத்தியிலும் ஜனநாதன் கதையில் இவர் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது.