சீனு ராமசாமிக்கு நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவிற்கு விஜய்சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர் சீனு ராமசாமி. அவருக்கு இன்று பிறந்தநாள். தனது வாரிசான விஜய்சேதிபதியை இவர் எப்போதும் எனது மகன் என்று குறிப்பிடுவார். அதோடு பட்டங்களே வேண்டாம் என்று இருந்தவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை வழங்கியவரும் இவர்தான். ஆகவே தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குருநாதா என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.