சினிமா

மூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்

மூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்

webteam

விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தினை அட்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனை அடுத்து ‘விஜய்63’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த செய்திகள் வலம் வர தொடங்கின.  

விஜய்யை வைத்து அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியில் வெற்றிப் பெற்றன. மேலும்  ‘மெர்சல்’ வெற்றிப் படமாக அமைந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அது வெளியாகததால் தயாரிப்பு அளவில் அது சிக்கலுக்குள்ளானது. எனவே அதனை சரி செய்யும் நோக்கில் விஜய், மீண்டும் இயக்குநர் அட்லிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்.

விஜய்யுடன் 3வது முறையாக இணையும் அட்லி ‘தளபதி 63’இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்க இருக்கிறது. மூன்றாவது முறையாக இவர்கள் இணைய உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.