சினிமா

‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா ?

‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா ?

jagadeesh

உலகெங்கிலும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். ஆனால், ஒரு விளையாட்டு வீரன் அல்லது அணி கடும் போராட்டங்களை சந்தித்து, சூழ்ச்சிகளைத் தாண்டி இறுதியில் வெற்றியடைதல் எனும் ஒற்றை 'டெம்ப்ளேட்டுக்குள்' அவை அனைத்தையும் அடக்கிவிட முடியும். அதற்கு ஷாருக்கானின் 'சக் தே இந்தியா' தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷின் 'கனா' வரை பல திரைப்படங்களை உதாரணமாக அடுக்கலாம்.

விளையாட்டு படங்களின் பொதுவான டெம்ப்ளேட்டுக்குள்ளேயே விஜய்யின் ‘பிகில்’ படமும் இருக்கும் என்பதை படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் விவரிக்கின்றன. பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக வரும் விஜய், முன்னாள் கால்பந்து வீரர். ஏதோ ஒரு சூழ்ச்சியால் விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவர், ஒரு அணியை வெற்றியடையச் செய்வதற்காக மீண்டும் கால்பந்து களத்திற்குள் பயிற்சியாளராய் நுழைகிறார். அதிரடியான அவரது குணமும், திறமையும் பெண்கள் அணியை கோப்பை வெல்ல வைக்கிறது. இப்படி 'பிகில்' படத்தின் டிரைலர் காட்சிகளை வைத்து படத்தின் கதையை யூகிக்க முடிகிறது.

ஆனால், ரசிகர்களின் எல்லாவிதமான யூகங்களையும், அந்த Sports Template-ஐயும் தாண்டி சுவாரஸ்யம் கொடுக்க ‘பிகில்’ இயக்குநர் அட்லி முனைந்திருக்கிறார். அதற்காகவே, வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம், விஜய்யின் அப்பா கதாபாத்திரம் போன்றவற்றை திரைக்கதையில் புகுத்தியிருக்கிறார். இவை வழக்கமான விளையாட்டுப் படங்களில் இருந்து 'பிகிலை' நிச்சயம் வேறுபடுத்திக் காட்டும் எனவும் எதிர்பார்க்கலாம்.