சினிமா

ஜார்ஜியாவில் தொடங்கியது ‘விஜய் 65’ படப்பிடிப்பு - போட்டோ வெளியிட்ட படக்குழு!

ஜார்ஜியாவில் தொடங்கியது ‘விஜய் 65’ படப்பிடிப்பு - போட்டோ வெளியிட்ட படக்குழு!

sharpana

‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியதை விஜய் ஸ்டைலாக நின்றிருக்கும் படப்பிடிப்புத் தள புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறது தயாரிப்பு  வெளியிட்டிருக்கிறது.

'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பட பூஜை கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களித்தவுடன் விஜய் 16 நாட்கள் படப்பிடிப்பிற்காக இரு நாட்களுக்கு முன்பு ஜார்ஜியா புறப்பட்டார்.

‘விஜய் 65’ படக்குழுவினர், ஏற்கெனவே அங்கு சென்று அரங்கம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா செல்லவிருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் விஜய்க்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்கும் புகைப்படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டைலிஷாக நெல்சன் திலீப் குமாருடன் நின்றிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”‘விஜய் 65’ ஷுட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கியது” என்று படக்குழு வெளியிட்டுள்ளது.