சினிமா

விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறாரா பாண்டிராஜ்?

விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறாரா பாண்டிராஜ்?

webteam

நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் விஜய்க்கு தமிழில் கடைசியாக பிகில் படம் வெளியானது. அதன் பிறகு தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்
ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். வேகமாக
படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற தகவல் பரவிவருகிறது. 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குநர் யாராக இருப்பார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனியின் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.