சினிமா ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக வரும் விஜய்யின் ‘பைரவா’ படம் 55 நாடுகளில் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைரவா’. இந்த படம் இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியாக இருக்கிறது. வரும் 12-ம் தேதி தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 450 தியேட்டர்களில் வெளியாகிறதாம். ஒரே நாளில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவதால் ‘கபாலி’, ‘தெறி’, ‘வேதாளம்’ படங்களின் வசூல் சாதனையை ‘பைரவா’ முறியடிக்கும் என்கிறார்கள். இப்படம் முன்னதாக ஜன.11 ஆம் தேதி நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழ் படம் ஒன்று அதிக நாடுகளில் வெளியாகும் சாதனையை ‘பைரவா’ படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.