சினிமா

விஜய் அடுத்த படத்தில் நயன்தாரா ஜோடி?

விஜய் அடுத்த படத்தில் நயன்தாரா ஜோடி?

webteam

விஜய்யின் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

மெர்சல் வெற்றிக்குப் பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அந்தப் படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் நயன்தாரா தரப்பில் இருந்தும் இதற்கான பதில் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை. தற்சமயம் மெர்சல் வெற்றியை துபாயில் படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார் விஜய். அவர் இந்தியா திரும்பிய பிறகு இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிய வருகிறது.