சினிமா

90 லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜயின் ‘குட்டிக் கதை’ பாடல்

90 லட்சம் பார்வையாளர்களை கடந்த விஜயின் ‘குட்டிக் கதை’ பாடல்

webteam

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி தொழிற்சாலையில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து ‘பிகில்’ பட வருவாய் ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, அவரது வீட்டிற்கே அழைத்து வந்த வருமான வரித்துறையினர் 23 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர்.

இதனையடுத்து வருமானவரித்துறைச் சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார் விஜய். இதனை அறிந்துகொண்ட விஜயின் ரசிகர்கள் என்.எல்.சி முன்னிலையில் விஜயை பார்ப்பதற்காக திரண்டனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த செல்ஃபி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து ‘மாஸ்டர்’ படக்குழுவிலிருந்து காதலர் தின பரிசாக ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் யூடியூப்-ல் வெளியிடப்பட்டது. அதனையடுத்து இணையத்தில் வைரலான இந்தப்பாடல் ஒரே நாளில் 90 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

மேலும் 10 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ளது. இந்தத் தகவலை சோனி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ‘குட்டிக் கதை’ பாடலில் வரும் விஜயின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.