சினிமா

'விவேகானந்தரின் விஜயமே! வருக.. நல்லாட்சி தருக!' - மதுரையில் விஜய் ரசிகர்களின் போஸ்டர்.!

'விவேகானந்தரின் விஜயமே! வருக.. நல்லாட்சி தருக!' - மதுரையில் விஜய் ரசிகர்களின் போஸ்டர்.!

webteam

மதுரையில் விவேகானந்தரின் விஜயமே! வருக, நல்லாட்சி தருக என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கடந்த வாரம் நடிகர் விஜய் திருமண நாள் அன்று எம்ஜிஆர், ஜெயலலிதா போல விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை சித்தரித்து மதுரையில் ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலானது

இந்நிலையில், தற்போது மதுரையில் விவேகானந்தரின் விஜயமே! வருக, நல்லாட்சி தருக என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதில் நடிகர் விஜய் காவி உடை அணிந்திருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், "நாடு நலம் பெற 100 இளைஞர்கள் வேண்டும் என்றார் விவேகானந்தர்; தளபதி! உன்னிடம் இருப்பதோ பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள். விவேகானந்தரின் விஜயமே வருக.. நல்லாட்சி தருக..” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.