சினிமா

2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு

2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு

Rasus

மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இளம் இயக்குநர் அட்லியின் படைப்பான ‘மெர்சல்’ படத்தில் விஜய், எஸ்ஜே சூர்யா, வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக பேசப்பட்ட ஒரு வசனம், பாஜகவினரால் எதிர்க்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லண்டனை சேர்ந்த IARA அமைப்பின் மூலம் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ‘மெர்சல்’ திரைப்படம் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.