Vijay Deverakonda Shouryuv
சினிமா

தனது அடுத்த படத்தின் குழுவை அறிமுகம் செய்த விஜய் தேவரகொண்டா! | Shouryuv

#VDxSHOURYUV என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு Alejandro Martinez ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

Johnson

நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்தாக `ஹாய் நானா' பட இயக்குநர் சௌர்யுவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்போது இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்தக் குழு 'That’s A Roar'என்ற தலைப்பில் இப்படத்திற்கான ஒரு தீம் பாடலையும் வெளியிட்டுள்ளது.

#VDxSHOURYUV என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு Alejandro Martinez ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் ஃபால் அவுட் போன்ற பிரபலமான சீரிஸ்களில் பணியாற்றியவர் இவர். `பேட்ட', 'அனிமல்' போன்ற படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். `Snowpiercer', `Knight and Day', `Gods of Egypt' போன்ற படங்களில் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய Eric Durst இப்படத்தில் பணியாற்றுகிறார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது அசத்திக் கொண்டிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத் தொகுப்பாளர், சச்சின் லோவாலேக்கர் ஆடை வடிவமைப்பாளர் ஆகியோரும் இப்படத்தில் இருக்கிறார்கள். இந்த வலுவான கூட்டணி இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.