சினிமா

தமிழில் வெளியாகும் சமந்தா-விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்திற்கு பிறகு, விஜய் தேவரகொண்டா ‘லிகர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது ஷிவ நிர்வாணா இயக்கும் புதியப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். நாயகியாக சமந்தா நடிக்கிறார். காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றது. விவாகரத்திற்குப் பிறகு சமந்தாவிற்கு ‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா’ பாடல் உலக லெவல் வைரல் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதீஜாவாக நடித்திருந்த சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்திருப்பதால் ‘குஷி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகம் முழுக்க தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில்  வெளியாகிறது. ‘யசோதா’, ‘சகுந்தலம்’, ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸ், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப்படம் உள்ளிட்டவற்றில் செம்ம பிஸியாக நடித்து வரும் சமந்தா அடுத்ததாக கார்த்தியுடன் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.