VD, Rashmika Marriage
சினிமா

"உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம்!" - விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பதிவு | Virosh

நாங்கள் எந்த திட்டமும் செய்வதற்கு முன்பு... நாங்கள் எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்குப் பெயரைத் தந்தீர்கள்.  எங்களை நீங்கள் 'VIROSH' என அழைத்தீர்கள்.

Johnson

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண செய்திகள் தான் கடந்த சில மாதங்களாக டிரெண்டிங். இருவரும் `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். சில வருடங்களாகவே அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பொதுவெளியில் இருவரும் அதைப் பற்றி எந்த உறுதியான தகவலையும் பகிரவில்லை. 2024இல் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

Rashmika

இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவரின் நிச்சயதார்த்தமும் நடந்தது. மேலும் பிப்ரவரி 26-ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் என்கிற செய்திகள் கசிந்தாலும், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். சமீபத்தில் அவர்களது ரிசப்ஷன் அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தங்களது புதிய பந்தம் குறித்து இருவரும் இன்ஸ்ட்டாவில் ஸ்டோரி வைத்துள்ளனர்.

அதில், "நாங்கள் எந்த திட்டமும் செய்வதற்கு முன்பு... நாங்கள் எங்களுக்காக எதையம் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். அதீத அன்புடன், நீங்கள் எங்களுக்குப் பெயரைத் தந்தீர்கள்.  எங்களை நீங்கள் 'VIROSH' என அழைத்தீர்கள். அதனால், இன்று, நிறைந்த மனதுடன், உங்கள் முன்னிலையில் நாங்கள் இணைகிறோம். அதற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிட விரும்புகிறோம்.

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா

உங்களுடைய அதீத அன்பால் எங்களைப் பற்றியிருப்பதற்கு நன்றி. எப்போதுமே நீங்கள் எங்களில் பாதி. உங்களுக்கு அன்பும் அரவணைப்பும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைபெற உள்ளது எனவும், அதன்பின், ரிசப்ஷன் வருகிற மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது என்கிறது தகவல்.