பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இயக்குகிறார். இந்த அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். 'பூ' சசி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் முதலாம் பாகம். அந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருந்தார்.
உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு பிச்சைக்காரன் முதலாம் பாகத்தை சசி இயக்கினார். தமிழகத்தை தாண்டியும் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருந்தது. குறிப்பாக, ஆந்திராவில் ரூ.20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்குகின்றனர்.
இந்தப் படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படம், 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.