சினிமா

கொரோனாவால் விஜய்-65 படப்பிடிப்பு ஒத்திவைப்பு

கொரோனாவால் விஜய்-65 படப்பிடிப்பு ஒத்திவைப்பு

sharpana

விஜய் நடிக்கும் 65ஆவது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’விஜய் 65’ படத்தின்  படப்பிடிப்பு கடந்த மாதம் 8ஆம் தேதி ஜார்ஜியா நாட்டில் தொடங்கியது. ஆனால் அங்கு நிலவிய பருவ நிலை மாற்றம் காரணமாக திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. இதனால் சில காட்சிகளை மட்டும் படமாக்கிகொண்டு சென்னை திரும்பினர். மேலும் மே மாதம் இரண்டாம் வாரம் முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர் எனக் கூறப்படுகிறது.