‘விஜய் 63’ படத்தை எந்த இயக்குநர் இயக்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் கசிய தொடங்கியுள்ளது.
‘மெர்சல்’ ஹிட்டிற்கு பிறகு மீண்டும் அட்லியே விஜய்யை இயக்க இருப்பதாக செய்தி வலம் வந்தது. அதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் அடிப்பட்டுக் கொண்டிருந்தாலும் இறுதி நேரத்தில் ‘மெர்சல்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட்டை கணக்கில் கொண்டு அட்லியை விஜய் தேர்ந்தெடுப்பார் என பலரும் கருதினர். ஆனால் அங்குதான் விஜய்யின் நேர்மை வெளிப்பட்டது. ஏற்கெனவே முருகதாஸ்தான் இயக்க வேண்டும் என முடிவெடுத்திருந்த விஜய் அவரையே ‘விஜய்62’ க்கு தேர்வு செய்தார்.
இந்நிலையில் விஜய்யின் ‘விஜய் 63’ படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்’ தயாரிக்க உள்ளதாக செய்தி கிடைத்தது. ஆனால் அதற்குள் ‘காதலுக்கு மரியாதை’ சங்கிலி முருகன் தயாரிப்பார் என தகவல் பரவியது. இரண்டு தயாரிப்பாளர்கள் பெயர் அடிப்படுவதைபோலவே இரண்டு இயக்குநர்களின் பெயர்களும் ‘விஜய் 63’ சம்பந்தமான செய்திகளில் அடிபடுகிறது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வினோத்தின் கதை ஒன்றை கேட்டு விஜய் சம்மதம் சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது. கூடவே அட்லியே மறுபடியும் இணையலாம் என்றும் தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக விஜய் அதை உறுதிப்படுத்தும் வரை இந்தக் குழப்பம் தீரப்போவதில்லை.