சினிமா

அமெரிக்காவில் ‘சர்கார்’ அமைக்கும் விஜய்?

webteam

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து, எடுக்கப்பட்டு வரும் திரைப்படம்
சர்கார். இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 21ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு
வெளியிடப்பட்டது. பின்னர் 22ஆம் தேதி நள்ளிரவு விஜய் பிறந்த நாள் அன்று படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் கறுப்பு நிற உடையுடன் காட்சியளித்தார்.

உடை மட்டுமின்றி கூலிங் க்ளாஸ், வாட்ச், பேக் க்ரவுண்ட், கையில் வைத்திருந்த லைட்டர் என அனைத்தும் கறுப்பு நிறமாக
காட்சியளித்தது. இதில் விஜய் வாயில் சிகரெட் பிடித்திருந்தபடி போஸ் கொடுத்திருப்பார். இந்த விவகாரம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரசிகர் பட்டாளத்தையே கொண்ட விஜய், சிகரெட் காட்சியை தவிர்த்திருக்கலாம் என பல சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்தனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் வெளியான உடனே அதனை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி விட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் மட்டுமின்றி அதன்பிறகு விஜய் பிறந்த நாள், படத்தின் தலைப்பு என அனைத்தும் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து
சர்கார் படத்தின் எந்த தகவல் கசிந்தாலும் அதையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில்
சர்கார் படத்தின் ஓபனிங் சாங் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படங்களில் ஓபனிங் சாங்
என்றால், ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துக்கூறும் வகையில் அந்த பாடல் இருக்கும். அதேபோல் டான்ஸ்க்கும் பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் அமெரிக்காவில் எடுக்கப்படுகின்ற ஓபனிங் சாங் எவ்வாறு இருக்கும், அரசியல் ரீதியான ஏதேனும் கருத்துக்கள்
இடம்பெறுமா? என்று அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.