சினிமா

கொல்கத்தா ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய்

கொல்கத்தா ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய்

webteam

கொல்கத்தா ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய்யின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில்  நடைபெற்றது. அப்போது அங்கு வந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் அன்புடன் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மாடி படியில் தாவிச் செல்கிறார். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது. மேலும் காஞ்சிபுரம் படப்பிடிப்பின் போது நிறுத்தப்பட்டிருந்த விஜய் கேரவனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட புகைப்படங்களும்  வெளியாகி உள்ளன. விஜய்யின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கேரவனை திறந்து வந்து கையசைக்கிறார். அதை கண்ட அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே செல்கின்றனர். ’ஆபீசர் லுக்’கில் விஜய் அப்போது இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வருகிறது. அதனை அவரது ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர்.