அட்லி இயக்கத்தில் நடித்துள்ள மெர்சல் படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. இளைய தளபதியாக அறியப்பட்ட விஜய்க்கு மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி பட்டம் அளிக்கப்பட்டிருந்தது அவரது ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அரசியலுக்கு வருவதற்கு அச்சாரமாகவே விஜய், தளபதியாக புரமோஷன் பெற்றிருக்கிறார் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் பேசத்தொடங்கி விட்டனர். இந்தநிலையில், மெர்சல் படத்திலும் விஜய் அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும், அதற்கு வலு சேர்க்கும் வகையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் அட்லி, தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் சினிமா ரசிகர்கள். அட்லி பதிவிட்டிருந்த அந்த புகைப்படத்தின் பின்புலத்தில் விஜய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்த போஸ்டர் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் தேசியக்கொடி மற்று கட்சிக்கொடி ஒன்றில் பிண்ணனியில் விஜய் மைக்கில் பேசுவதுபோன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில் தேசியக் கொடியுடன் இடம்பெற்றுள்ள கட்சிக்கொடி படத்தில் விஜயின் கட்சியாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.