சினிமா

ஷூட்டிங்கில் விபத்து: வில்லன் நடிகர் காயம்!

ஷூட்டிங்கில் விபத்து: வில்லன் நடிகர் காயம்!

webteam

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நடிகர் வித்யூத் ஜாம்வால் காயமடைந்தார்.

தமிழில் அஜித் நடித்த 'பில்லா 2', விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் வில்லனாகவும் ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்தவர் இந்தி நடிகர் வித்யூத் ஜாம்வால். இவர் இப்போது ’ஜங்கிளி’ என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். 

ஜங்கிளி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. யானைகளுக்கும் மனிதனுக்குமான வித்தியாசமான உறவுகளைs சொல்லும் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இதில் ஜன்னல் வழியாக அவர் வெளியே குதிப்பது போல காட்சி. கயிறு கட்டி பாதுகாப்பாகக் குதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெளியே குதிக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவரது தலையில் அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.